சின்னசேலம் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
ADDED :3355 days ago
சின்னசேலம்: சின்னசேலத்தில், மதுரை வீரன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பெண் பக்தர்கள், பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். சாலை வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மகா தீபாரதனையும் நடந்தது. விழா நிகழ்ச்சியினை 6வது வார்டு கவுன்சிலர் ஜெயவேல் துவக்கி வைத்தார். தொடர்ந்து, இன்று(6ம் தேதி) மற்றும் நாளை (7 ம் தேதி) மதுரை வீரனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, 8 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அருந்ததியர் மக்கள் செய்து வருகின்றனர்.