பூட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் காணிக்கை
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவிலில், ரூ.2 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டது. சங்கராபுரம் வட்டம், பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம், 3 நாட்கள் நடந்தது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்தாண்டு திருவிழா முடிந்த நிலையில், நேற்று முன் தினம் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. கள்ளகுறிச்சி இந்து அறநிலைய துறை ஆய்வாளர் தமிழரசி முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது. இதில், காணிக்கையாக செலுத்தபட்ட சில்லரை மற்றும் ருபாய் நோட்டுகள் எண்ணபட்டது. மொத்தம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும்போது, ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.