செஞ்சி லலிதா செல்வாம்பிகை கோயிலில் ஸஹஸ்ர நாம ஹோமம் விழா!
செஞ்சி: செல்லப்பிராட்டி கிராமம் அருள்மிகு லலிதா செல்வாம்பிகை அம்மன் கோயிலில் ஒன்பதாம் ஆண்டு ஸம்வஸ்த்திரா அபிஷேகம் சோடசாக்ஷரீ ஸம்ஷ்டித லலிதா ஸஹஸ்ர நாம ஹோமம் விழா நடைபெறுகிறது. செஞ்சி மாநகர் அருகில் செல்லப்பிராட்டி கிராமத்தில் அமைந்துள்ள லலிதா செல்வாம்பிகை அம்மனுக்கு ஒன்பதாம் ஆண்டு ஸம்வஸ்த்திரா அபிகேஷகம் 10.9.2016 சனிக்கிழமை முதல் 12.9.2016 திங்கட்கிழமை வரையும், சோடசாக்ஷரீ ஸம்ஸ்டித லலிதா ஸஹஸ்ர நாம ஹோமம், மகா ஸாந்தாபிஷேகம் மற்றும் 16.9.2016 வெள்ளிக்கிழமை பவுர்ணமி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
12.9.2016 (திங்கள்)
காலை: 8.30 மணி- விக்னேஸ்வர பூஜை ஆரம்பம்
காலை: 9.30 மணி- பஞ்சதசாக்ஷரீ ஸம்ஸ்டித லலிதா ஸஹஸ்ர நாம ஹோமம்
மதியம்: 12.00 மணிக்கு- வசோத்தாரா பூர்ணாஹுதி
மதியம்: 12.30 மணிக்கு- மகாபிஷேகம், கலசாபிஷேகம்
மதியம்: 1.00 மணிக்கு- மகா தீபாராதனை
மதியம்: 1.30 மணிக்கு- அன்னதானம்
தொடர்புக்கு: 94440 67172.