சேலத்தில் ராஜகணபதி வல்லப கணபதியாக அருள்பாலிப்பு
ADDED :3356 days ago
அம்மாபேட்டை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சேலம் ராஜகணபதி, வல்லப கணபதியாக நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு விநாயாகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின், இரண்டாவது நாளான நேற்று காலை, 4 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை, 10 மணி முதல் மாலை, 4 மணி வரை, 16 வகையான திரவியங்கள் கொண்டு ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை, 4 மணிக்கு வல்லப கணபதி அலங்காரம் சாத்தப்பட்டது. இந்த அலங்காரத்தில் சாமி தரிசனம் செய்தால், அனைத்தும் பெற்று வல்லவர்களாக வாழலாம் என்ற ஐதீகம் இருப்பதால், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 16ம் தேதி வரை சிறப்பு அலங்காரம் சாத்துபடி நிகழ்ச்சி நடக்கிறது.