சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு
ADDED :3356 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி பூஜையும் 108 சங்கு ஸ்தாபனமும் சங்கு பூஜையும் 108 மூலிகைகளால் சன்னமதி ஹோமமும் பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் சந்தனக்காப்பு அலங்காராத்திலும் உற்சவர் சிறப்பு அலங்காராத்திலும் வீதியுலா நடந்தது. பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடன சபாபதி, சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரத்தினம் தெரு, காந்தி நகர், கோண்டூர் பாரத் நகர் விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.