மதுரை மாசி வீதிகளில் இன்று வாகனங்களுக்கு தடை
ADDED :3429 days ago
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை நகரில் இன்று(செப்.,7) மாலை நுாற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. மாசிவீதிகள், பழைய சொக்கநாதர் கோயில் தெரு, திருமலைராயர் படித்துறை தெரு வழியாக வைகை ஆற்றில் கரைக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஊர்வலப்பாதைகளில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.