அவிநாசி ஐயப்பன் கோவிலில் ஆண்டு விழா
ADDED :3430 days ago
அவிநாசி : அவிநாசி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அவிநாசி, காசிகவுண்டன் புதூர், சாஸ்தா நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவில், இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஸ்ரீ சாஸ்தா மூலமந்திரங்கள் ஒலிக்க, மகா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ ஐயப்பனுக்கு தேன், நெய், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ராஜ அலங்காரத்தில், ஸ்ரீ ஐயப்பன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, அன்னதானம் நடைபெற்றது.மாலை, 5:00 மணிக்கு, அவிநாசி வீதிகளில், ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா நடைபெற்றது.