உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம்: சிறுபாலையூர் முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று (6ம் தேதி) காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், முதல் கால யாகசாலை பூஜை, இரவு 9:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று (7ம்  தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.  தொடர்ந்து நாளை (8ம் தேதி) காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கும், 10:30 மணிக்கு முத்தாலம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !