பால் வழிந்த வேப்பமரம்: பரவசத்தில் மிதந்த மக்கள்
ADDED :3356 days ago
ஈரோடு: ஈரோட்டில் பால் வழிந்த வேப்ப மரத்தை, தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு, பி.பெ., அக்ரஹாரம் காவிரி கரை பகுதியில் தலைமை குடிநீர் நீரேற்று நிலையம் அருகே வேப்பமரம் உள்ளது. இதில் நேற்று காலை முதல் பால் வடிய தொடங்கியது. இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியது. அப்பகுதி மக்கள் சிறியவர், பெரியவர் என வித்தியாசமில்லாமல் மரத்தைக் காண ஆர்வத்துடன் சென்றனர். பால் வடிந்ததைப் பார்த்து பரவசப்பட்ட மக்கள், வேப்ப மரத்துக்கு மஞ்சள் தடவி, பட்டுத்துணி உடுத்தி, தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அப்பகுதியில், நேற்று பரபரப்பு காணப்பட்டது.