உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்

மானாமதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்

மானாமதுரை: மானாமதுரையில் பா.ஜ.,சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.இந்து முன்னணி மாநில ஆலோசகர் கலியாணிதேவர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.கருப்பையா,அழகர்சாமி, பெரியசாமி,அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர். ரயில்வே காலனி,ஜீவா நகர்,பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக நகர் முழுவதும் வலம் வந்தன. பின் அலங்கார குளத்தில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன.

*சிங்கம்புணரியில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நகரில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாதவன் நகர்,வேளார் தெரு, நேதாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விழாவில் பா.ஜ.,தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், நகரத்தலைவர் வசீகரன், ஆர்.எஸ்.எஸ்.ஒன்றிய செயலாளர் குகன், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், சாமிநாதன் பங்கேற்றனர்.

*காளையார்கோவிலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. செட்டியூரணி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி, காயாஓடை,கொல்லங்குடி, உருவாட்டி, புதுக்குடியிருப்பு, மறவமங்கலம், செவல்புஞ்சை ஆகிய இடங்களிலிருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டது.நேற்று காலை சண்முகம் விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.விநாயகர் கோவிலிலிருந்து துவங்கி சொர்ண காளீஸ்வரர்கோவில் வழியாக சென்று தெப்பக்குளத்தில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !