உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம்

பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம்

பரமக்குடி: பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் 42 சிலைகள் பங்கேற்றன. பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் எமனேஸ்வரம், தெளிச்சாத்தநல்லுார், சோமநாதபுரம், குமரக்குடி, பாலன்நகர் உள்ளிட்ட நகரின் 42 இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. சவுராஷ்ட்ர தேசிய கல்வி கழக தலைவர் ராமமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்து முன்னணி நகர் தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் கங்காதரன், மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி, பொருளாளர் ஆதித்தன், நகர் செயலாளர்கள் குமார், மாரி, பாலன் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் கேசவபெருமாள் பேசினார். ஊர்வலம் சின்னக்கடை தெரு, காந்தி சிலை, ஐந்துமுனை, ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பெரிய பஜார் வழியாக பெருமாள் கோயில் சன்னதியை அடைந்தது. அங்கு வைகை ஆற்றில் மணல் பள்ளத்தில் தண்ணீர் நிரப்பி அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. நகர் பொதுச்செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் நேற்று இந்து முன்னணியினர், ராமேஸ்வரம் புதுரோடு, இந்திரா நகர், முத்துராமலிங்கத்தேவர் நகர், திட்டகுடி, சம்பை பகுதியில் இருந்து 14 விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோயில் நான்கு ரதவீதி வழியாக அக்னி தீர்த்த கரைக்கு வந்தனர். மகா தீபாரதனை முடிந்ததும், அக்னி கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !