கண்ணபிரான் பஜனை கோயிலில் உறியடி விழா
ADDED :3355 days ago
வெம்பக்கோட்டை: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் கண்ணபிரான் பஜனை கோயிலில் உறியடி விழா நடந்தது. ஓய்வு மாவட்ட கல்வி அலுவலர் அய்யப்பன் வரவேற்றார். திருப்பூர் விஷ்ணு மெடிக்கல் பவுண்டேசன் டாக்டர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். சென்னை பிரசாந்த் மருத்துவமனை சேர்மன் டாக்டர் கோபால்சாமி, ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ வித்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருவேங்கடராமானுஜதாஸ் ,மதுரை மகாத்மா பள்ளி தாளாளர் லதா, தொழிலதிபர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், வரதராஜ், வினாயக் செந்தில், நாராயணசாமி கலந்து கொண்டனர். கம்மவார் சங்க தலைவர் லிங்கசாமி நன்றி கூறினார்.