உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னியம்மன் ஜாத்திரை திருவிழா கோலாகலம்

பொன்னியம்மன் ஜாத்திரை திருவிழா கோலாகலம்

ஆர்.கே.பேட்டை: பொன்னியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம், ஏரிக்கரையில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. ஆவணி, மூன்றாம் வாரம், ஜாத்திரை திருவிழா நடந்தது. செவ்வாய்க்கிழமை மாலை, வீதியுலா எழுந்தருளிய அம்மன், பிள்ளையார் கோவில் எதிரே, வேப்பிலை குடிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள், அம்மனுக்கு கும்பம் படைத்தனர். இரவு, பக்தி நாடகம் நடைபெற்றது. நேற்று காலை, கங்கையில் அம்மனை கரைக்கும் நிகழ்ச்சியுடன், ஜாத்திரை திருவிழா நிறைவு பெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !