ஈரோடு சதுர்த்தி விழாவில் 51 கிலோ லட்டு படையல்
ADDED :3354 days ago
ஈரோடு: விநாயகர் சதுர்த்தி விழாவில், 51 கிலோ லட்டு படைத்து வழிபாடு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா, நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோட்டில், இந்து முன்னணி, பொதுமக்கள், ஆன்மிக நண்பர்கள் அமைப்பு சார்பில், பல்வேறு இடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கபட்டு, தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில், ஈரோடு, என்.எம்.எஸ்., காம்பவுண்ட் எழுச்சி நண்பர்கள் அமைப்பு சார்பில், சற்று வித்தியாசமாக, அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ராஜவிநாயகர் சிலைக்கு, நேற்று, 51 கிலோ எடை கொண்ட, ஒரே லட்டை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.