உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் முளைப்பாரி விழா
ராமநாதபுரம்,: உச்சிப்புளி அருகே கீழநாகாச்சி உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயில் முளைப்பாரி விழா ஆக., 30ல் காப்பு கட்டி முத்து பரப்புதலுடன் துவங்கியது. தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. செப்.,6 இரவு வைகை ஆற்று கரையில் இருந்து சுடப்படாத களிமண் பானையில் கரகம்எடுத்து கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து ஒயிலாட்டம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் ஏராளமானோர் அங்கபிரதட்சணம் செய்தும், பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். ஏராளமாவ பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு செப்., 13ல் குளுமை பொங்கல் நடக்கிறது.
* ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர்தெரு முத்துமாரி யம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் ஏராளமான பெண்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துவந்து அரசூரணியில் கரைத்தனர்.