மதுரை மாசி வீதிகளில் 220 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ADDED :3356 days ago
மதுரை: மதுரை மாசி வீதிகளில் நேற்று 220 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 220 விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் வைக்கபட்டிருந்தன. நேற்று ஆற்றில் கரைப்பதற்காக கீழமாசிவீதியில் இருந்து ஊர்வலமாக மாசி வீதிகளில் எடுத்துச்செல்லப்பட்டது. பார் கவுன்சில் உறுப்பினர் தாளை முத்தரசு, மதுரை நாடார் உறவின்முறை மோகன், யாதவர் இளைஞர் மகாசபை மணிவண்ணன், பா.ஜ., மாநில செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அழகர்சாமி, துணை தலைவர் சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.