மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில், 81 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்று நாட்கள் கோ பூஜை, விளக்கு பூஜை, குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்று மாலை, 5:30 மணிக்கு அனைத்து சிலைகளையும் வாகனங்களில் காரமடை ரோடு அரசு போக்கு வரத்து கழக டெப்போ முன்பு கொண்டு வந்து வரிசையாக நிறுத்தினர். விசர்ஜன ஊர்வல துவக்க நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பொதுக்கூட்டத்துக்கு பின், 81 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் துவங்கி காரமடை ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஊட்டி மெயின் ரோடு வழியாக பவானி ஆற்றுக்குச் சென்றது. 500 போலீசார், அதிரடிப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.