சாமுண்டீஸ்வரி கோவிலில் 15ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :3355 days ago
பரங்கிப்பேட்டை: புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி இன்று (8ம் தேதி) விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. நாளை 9ம் தேதி முருகனுக்கு சத்ரு சம்ஹார த்ருசதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. 10ம் தேதி பிரவேச பலி, தீபாராதனையும், 11ம் தேதி யந்திர பூஜை, மூர்த்தி ஹோமம், தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை, 13ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, 14ம் தேதி நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 15ம் தேதி அதிகாலை ௬ம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்படாகி காலை 7:51 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை நாட்டாமை சிவகுமார் செய்து வருகிறார்.