ராமேஸ்வரம் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
ADDED :3355 days ago
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் ராமேஸ்வரம் திட்டகுடி, நகராட்சி அலுவலகம், ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷடை செய்து பூஜைகள் நடந்தது. நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது. திட்டகுடி, கோயில் ரதவீதி வழியாக அக்னிதீர்த்த கடற்கரைக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து அக்னி தீர்த்த கடலில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.