உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் விநாயகர் ஊர்வலம்: தொண்டர்கள் உற்சாகம்

திருப்பூர் விநாயகர் ஊர்வலம்: தொண்டர்கள் உற்சாகம்

திருப்பூர்: திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் ஊத்துக்குளியில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம், நடைபெற்றது.* அவிநாசி வட்டார, நகர இந்து முன்னணி சார்பில், மொத்தம் 215 விநாயகள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தினமும், காலை மற்றும் மாலையில், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன. விசர்ஜன விழா, பொதுக்கூட்டம், வ.உ.சி., திடலில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி விஜயகுமார் தலைமை வகித்தார். நகர பொது செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியன், மாநில குழு நிர்வாகி செந்தில்குமார், திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். சென்டை மேளம் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைடைந்தது. லாரிகள் மூலம் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, சிறுமுகை அருகே பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

* பல்லடம் இந்து முன்னணி சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம், நேற்று நடைபெற்றது. 42 இடங்களில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக சென்றன. முன்னதாக, நடந்த பொதுக்கூட்டத்துக்கு, மாவட் பொது செயலாளர் மணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் தாமு வெங்கடேஷ், பா.ஜ., மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றினர். ஊர்வலத்தை, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல்தலைவர் வெற்றிவேல் துவக்கி வைத்தார். சென்டை மேளத்துடன், என்.ஜி.ஆர்., ரோட்டில் துவங்கி, மாணிக்காபுரம் ரோடு, மங்கலம் ரோடு வழியாக சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

* ஊத்துக்குளி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், நேற்று முன்தினம் நடைபெற்றது. தலைமை வகித்து, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில் குமார் பேசுகையில், ""கோவில் வருமானத்தை கோவில்களுக்கே பயன்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும், என்றார்.ஊத்துக்குளி பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய ஊர்வலம், பிரதான ரோடுகள் வழியாக வந்து, செங்கப்பள்ளி அருகே நிறைவடைந்தது. அங்கிருந்து, பாரியூர் பவானி வாய்க்காலில், விசர்ஜனம் செய்யப்பட்டது.

* தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், கிராம கோவில் பூசாரி பேரவை சார்பில், ஸ்ரீ விநாயகர் சதூர்த்தி மக்கள் எழுச்சி பொது கூட்டம் நேற்று மாலை, திருப்பூர் ஆலாங்காட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமுஜி, தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அவிநாசி வாகீசர் மடலாய ஆதீனம், காமாட்சிதாச ஏகாம்பரநாத சுவாமி, மாநில இணை அமைப்பு செயலாளர் மனோஜ்குமார், இளைஞரணி இணை அமைப்பாளர் விஸ்வநாதன், மாவட்ட கிராம கோவில் பூசாரி பேரவைஅமைப்பாளர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின், விசர்ஜன ஊர்வலம், முக்கிய பகுதிகள் வழியாக சென்று, சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !