உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்: அக்.8ல் கொடியேற்றம்!

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்: அக்.8ல் கொடியேற்றம்!

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று இரவு, மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ், 837ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நேற்று துவங்கியது. மாலை 6 மணிக்கு, மவ்லீது ஷரீப் ஓதப்பட்டு, விழா துவங்கியது. முன்னதாக, மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன், உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின், பாதுஷா நாயகம் சமாதியில் சந்தனம் வைக்கப்பட்டது. இந்து, முஸ்லிம்கள் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக கொண்டாடப்படும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அக்., 8ல் கொடியேற்றம், 20ல் சந்தனக்கூடு, 28ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு, விழா நிறைவடையும். ஏற்பாடுகளை, தர்கா ஆணையாளர் ராமராஜன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !