உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதூர் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மருதூர் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, மேட்டுமருதூர் கிழக்கு தெருவில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர், மூன்று கால பூஜை செய்யப்பட்டு, நேற்று காலை, 8.30 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. குளித்தலை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மருதூர் பேரூராட்சி மன்றத்தலைவர் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர், பொது மக்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !