காசி விஸ்வநாதர் கோவில் பாலாலய விழா
ADDED :3340 days ago
கரூர்: அரவக்குறிச்சி, காசிவிஸ்வநாதர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதனால், கோவில் திருப்பணி வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக, பாலாலயம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், வாஸ்து, முதற்கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஆன்மீக சான்றோர்கள் பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர், மெய்யன்பர்கள் முன்னிலையில் தீபாராதனை, இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. பின்னர், விமான கலசங்களுக்கு பாலாலயம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.