உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா

சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவிலில், பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், அதிகாலை நடந்த சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு நடந்தது. காலை, 11:00 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து நடந்த மஹா தீபாரதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !