உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னம்பூண்டி கோவில் கும்பாபிஷேக விழா

பொன்னம்பூண்டி கோவில் கும்பாபிஷேக விழா

திருக்கனுார்: பொன்னம்பூண்டி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான பொன்னம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், முத்துமாரியம்மன், வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணியர், கெங்கையம்மன் மகா ராஜகாளியம்மன், துர்க்கை அம்மன், சந்தான சிவன் பார்வதி, பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் மற்றும் பூவாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று  நடந்தது. விழாவை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜையுடன், பல்வேறு பூஜைகள் துவங்கியது.  லட்சுமி ஹோமம், காப்புக் கட்டுதல், சுமங்கலி பூஜை, ஹோமம் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு, நான்காம் கால பூஜையை தொடர்ந்து, கடம் புறப்பாடும், விநாயகர் உள்ளிட்ட அனைத்து சன்னதி கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !