உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு மாத நவராத்திரி கொலு கண்காட்சி

ஒரு மாத நவராத்திரி கொலு கண்காட்சி

கோவை, பெரியகடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், வரும் 14ம் தேதி முதல், நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்குகிறது. தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்), ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில், சிறப்பு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஆக., 29 முதல், இம்மாதம் 7ம் தேதி வரை, கணபதி தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து, நிறைவடைந்தது. தொடர்ந்து, நவராத்திரி விழாவையொட்டி, செப்., 14 முதல், அக்., 14 வரை, ஒரு மாதத்துக்கு, நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை, பூம்புகாரில் நடக்கிறது. களிமண், காகித கூழ், மார்பிள் உள்ளிட்டவையால் செய்யப்பட்ட கொலு பொம்மைகள், அஷ்டலட்சுமி பொம்மைகள், தசாவதாரம், மகாபாரதம், ராமாயண காட்சிகள் அடங்கிய செட் என, ஒரு அங்குலம் முதல் மூன்றடி உயரம் வரை அனைத்து வகையான பொம்மைகளும், கண்காட்சியில் இடம்பெறுகிறது. கண்காட்சி நாட்களில், விற்கப்படும் பொம்மைகளுக்கு, 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தினமும் காலை, 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !