தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம்
ADDED :3396 days ago
திண்டிவனம் : திண்டிவனம் துாய வியாகுல அன்னை தேவாலயத்தில் பெருவிழா கொடியேற்றம் நடந்தது. துாய வியாகுல அன்னை பெருவிழா, கடந்த ௬ம் தேதி துவங்கி, வரும் ௧௬ம் தேதி வரை நடக்கிறது. துவக்க விழாவையொட்டி, வளாகத்தில் கொடியேற்றப்பட்டு, திருப்பலி நடந்தது. முன்னதாக, ஆலயத்தின் பங்கு தந்தை வேளாங்கன்னி சவரிதாஸ் தலைமையில், கொடிபவனி நடந்தது. இதில், பங்கு பேரவை செயலாளர் சேவியர், துணை செயலாளர் டான்போஸ்கோ, மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை பால்ராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.