பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.99 கோடி
ADDED :3658 days ago
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் 29 நாட்களில் ரூ.1.99 கோடி வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் உண்டியல்கள் (செப்.,9) திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 99 லட்சத்து 46 ஆயிரத்து 337, தங்கம் 1020 கிராம், வெள்ளி 12,200 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 963 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.