மேல்அருங்குணம் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3321 days ago
செஞ்சி: மேல்அருங்குணம் முனீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி ஒன்றியம், மேல்அருங்குணம் முனீஸ்வரன், ஊத்துக்காட்டம்மன், வீரன் கோவில்களில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, சூரிய பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடும், 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 11 மணிக்கு மூனீஸ்வர பூஜையும், பகல் 12:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.