திருப்போரூரில் விநாயகர் வீதியுலா கோலாகலம்
ADDED :3321 days ago
திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள பழமை வாய்ந்த கங்கை விநாயகர் மற்றும் தங்க விநாயகர் கோவில்களில் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது. திருப்போரூர், சரவணப்பொய்கை குளக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கங்கை விநாயகர் மற்றும் தங்க விநாயகர் கோவில்களில், விநாயகர் திருவீதியுலா கோலாகலமாக நடந்தது. முன்னதாக, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடத்தப்பட்டு தீபாராதனைகள் செய்யப்பட்டன. பிற்பகலில், பக்தர்களுக்கும், பகுதிவாசிகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, மாலையில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயக பெருமானின் உற்சவ மூர்த்திகள், மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாடவீதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும், விநாயகருக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.