திரிபுரசுந்தரி அம்மனுக்கு வெள்ளிக்கவச தேர்
ADDED :3320 days ago
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம், திரிபுரந்தர சுந்தரி அம்மனுக்கு, வெள்ளிக்கவச தேர் தயாராகி வருகிறது. திருக்கழுக்குன்றம் பக்தவத்சல கோவிலில் வேதகிரீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி உள்ளார். பிரம்மோற்சவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்களின் போது, கோவில் உட்பிரகாரத்தில் அம்மன் வலம் வருவார். இந்நிலையில், அம்மனுக்காக, 11 அடி உயர வெள்ளிக்கவச மரத்தேர் உருவாக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரியில், மாமல்லபுர சிற்பக்கூடத்தில் துவங்கிய தேர் அமைக்கும் பணி, எட்டு மாதங்களில் முடிந்து, தற்போது அழகிய அலங்கார மரத்தேர் உருவாகி உள்ளது. இதன் மேல், வெள்ளிக்கவசம் வேயப்பட இருக்கிறது. இதற்காக தேர், சென்னை கொண்டு செல்லப்பட உள்ளது.