உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்து முன்னணி நகரம், ஒன்றியம் சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. விநாயகர்  சதுர்த்தியையொட்டி கொடைக்கானலில் 40 க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகளுடன் நடந்த  விநாயகர் ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்து  முன்னணி நகரத் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். விழாவில் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, பொது செயலாளர்  ஜெகன்,செயலாளர் அண்ணாத்துரை கலந்து கொண்டனர். கொடைக்கானல் ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.   மதியம் 2 மணிக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் ஊர்வலம் துவங்கி ஆற்றில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !