விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3319 days ago
விருதுநகர்: மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா, செப். 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மண்டபபடிகளில் வழிபாடு நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை 11.30 மணிக்கு நடந்தது. சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அடுக்கு தீபாராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, குங்கும பிரசாதம் அளிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது.