வடமதுரையில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
வடமதுரை: வடமதுரையில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் முதல் கால பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள் முடிந்ததும் கடங்கள் புறப்பாடாகி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பொது மேலாளர்கள் கே.எம்.எஸ்.நாயுடு, ஹரிபாபு, மேலாளர் தர்மராஜ் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பங்கேற்றனர். எரியோடு: எரியோடு மறவபட்டியில் விநாயகர், முருகன், காளியம்மன், மாரியம்மன் கோயில், கன்னிமார், முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் மீனா, துணைத்தலைவர் வெற்றிவேல் மற்றும் கவுன்சிலர்கள், அ.தி.மு.க., நகர செயலாளர் அறிவாளி, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் கவிதா, வீராச்சாமி, சீனிவாசன், சுப்பையன் உள்பட பலர் பங்கேற்றனர்.