உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை!

பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை!

பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் திருபவித்ரம் உற்சவம் முன்னிட்டு உற்சவர் பெருமாளுக்கு தாமரைப்பூக்களால் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.  

பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 10 ம்தேதி திருபவித்ர உற்சவம் மாலை 5:30 மணிக்கு அனுமதி பெறுதல், புற்றுமண் பூஜை, விதையிடுவிழா, யாக குண்டங்கள் , கலச பூஜை, பவித்ர மாலைகளுக்கு பிரதிஷ்டை சயனாதிவாசம் ஆகியவையுடன் துவங்கியது.  11ம் தேதி  மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பவித்ர மாலைகள் சாற்றுதல், 2வது கால யாகபூஜைகள், நேற்றுமுன்தினம் 12ம் தேதி  காலை 9:00 மணிக்கு  உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி, பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், யாகவேள்விகள், மகாசாந்தி கலச திருமஞ்சனம், கும்பபிரதிஷ்டை, மாலை 6:00 மணிக்கு 1008 தாமரை மலர்களால் தாயாருக்கு சிறப்பு சகஸ்ர நாம அர்ச்சனையும், பெருமாளுக்கு துளசி அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !