உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரயிலடி விநாயகர் கோவிலில் கர்நாடக இசைக்கச்சேரி

ரயிலடி விநாயகர் கோவிலில் கர்நாடக இசைக்கச்சேரி

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாணவர்களின், கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது. விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோவிலில் 78ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, இசைக்கலைமணி மஞ்சு கண்ணன் தலைமையில், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விழுப்புரம் தர்ஷிணி இசைப்பயிலக மாணவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது. இதில், ரெயின்போ பவுண்டேஷன் சேர்மன் ரகுநாதன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ராஜ்குமார் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !