சின்னாளபட்டி ராமஅழகர் கோயிலில் ஏகாதசி பூஜை
ADDED :3641 days ago
சின்னாளபட்டி : சின்னாளபட்டி ராமஅழகர் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில், அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில் ஏகாதசி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.