மீனங்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
ADDED :3310 days ago
சாயல்குடி : கடலாடி அருகே மீனங்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்கள் நேர்த்திகடனாக மண்ணால் செய்யப்பட்ட குதிரை, அய்யனார், தவழும் பொம்மை, உள்ளிட்ட புரவிகளை எடுத்துவந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனாரை தரிசித்தனர்.