உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஹயக்ரீவர் ஹோமம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஹயக்ரீவர் ஹோமம்

திருவள்ளூர்: திருவள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், ஹயக்ரீவர் ஹோமம் நடந்தது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயரத்தில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆவணி திருவோணத்தை முன்னிட்டு, ஹயக்ரீவர் ஹோமம், நேற்று நடந்தது. காலை, 8:30 மணிக்கு துவங்கி, 11:30 மணி வரை ஹோமம் நடந்தது. பின், மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !