உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுமலைதாங்கல் கோவிலில் 16ம் தேதி கும்பாபிஷேகம்

பசுமலைதாங்கல் கோவிலில் 16ம் தேதி கும்பாபிஷேகம்

செஞ்சி: பசுமலை தாங்கல் பாண்டுரங்க கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. செஞ்சி தாலுகா, பசுமலை தாங்கல் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத பாண்டுரங்க கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கணபதி பூஜையுடன் துவங்குகிறது. நாளை மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜை, 7:00 மணிக்கு மகா ஹோமம், 8:00 மணிக்கு மகா பூர்ணஹூதியும் தொடர்ந்து கடம் புறப்பாடும், 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !