உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் அசன பண்டிகை

கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் அசன பண்டிகை

தூத்துக்குடி : கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தின் அசன பண்டிகை திருவிழா இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை நடக்கும் பண்டிகை ஆராதனையில் தூத்துக்குடி, நெல்லை பிஷப்கள் கலந்து கொண்டு செய்தி அளிக்கின்றனர். கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தின் அசன பண்டிகை விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான 87ம் ஆண்டு அசன பண்டிகை விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிஷப் ஜெபச்சந்திரன், நெல் லை பிஷப்பும் கோரம்பள்ளம் ஆலயத்தின் உறுப்பினருமான கிறிஸ்துதாஸ் ஆகியோர் கல ந்து கொள்கின்றனர். இன்று அதிகாலையில் நடக்கும் ஜெனரேட்டர் பிரதிஷ்டை மற்றும் பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனையில் பிஷப்கள் செய்தி கொடுக்கின்றனர். ஆராதனை முடிந்தவுட ன் இரு பிஷப்களும் சபை மக்களிடம் கலந்துரையாடுகின்றனர். அதனை தொடர்ந்து இன் று 4 மணிக்கு ஞானஸ்நான ஆராதனை நடக்கிறது. மா லை 5 மணிக்கு அசன விருந்து நடக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலயத்தின் சேகரகுரு ஆபிரகாம் பீட்டர், சபைஊழியர் வேதநாயகம் மற்றும் சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !