குன்றம் திரும்பினார் சுப்பிரமணிய சுவாமி
ADDED :3522 days ago
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் நேற்று பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார். மதுரையில் நடந்த இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக செப்.,10ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பாடாகினர். திருவிழா முடிந்து, செப்.,14ல் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நெல்பேட்டை பகுதி மண்டபத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அங்கு சர்வ அலங்காரமாகி பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயில் வந்து சேர்ந்தனர்.