உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லியங்குளத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கொல்லியங்குளத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கடலுார்: தட்டாம்பாளையம் கொல்லியங்குளத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.  பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம்  கொல்லியங்குளத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை  அபிஷேகமும், இரவு வீதியுலாவும் நடந்தது. நேற்று மதியம் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்தனர். மாலை செடல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு  வீதியுலா நடந்தது. வரும் 19ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !