உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

முனீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர்.நகர் முனீஸ்வர சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வர சுவாமி கோவிலில் புதியதாக கட்டப்பட்ட மண்டபம் மற்றும் முனீஸ்வர சுவாமி கோவில்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் இருந்து சிறப்பு பூஜை துவங்கியது. நேற்று 16ம் தேதி காலையில் கோ  பூஜைக்குப்பின், கடம் புறப்பாடாகி, கும்பாபிஷேகம் நடந்தது. சிதம்பரம் சக்கரவர்த்தி சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை  நடத்தி வைத்தார். விழாவில் முன்னாள் அமைச்சர் கலைமணி, பொறியாளர் அரவிந்தன், விவசாய சங்கத் தலைவர் ராஜாராமன், கிள்ளை  வர்த்தக சங்கத் தலைவர் பாஸ்கர், மாஜி மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  மாலையில் கிள்ளை காளியம்மன் கோவில் குளக்கரையில் இருந்து கரகம் புறப்பட்டு கோவிலை சென்றடைந்தது. இரவு பட்டி மன்றம்  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !