உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லாஸ்பேட்டை ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்

லாஸ்பேட்டை ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. லாஸ்பேட்டை அசோக் நகர்  வாஞ்சிநாதன் வீதியில்,   பூரணி பொற்கலை சமேத தலையாரி வேலாயுத ஐயனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, ஐயனார் மற்றும்  பரிவார தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 14ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்கை விக்னேஸ்வர  பூஜையுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. அன்று மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை,  15ம் தேதி, காலை 7:30  மணிக்கு பஞ்சாஸ்திர ஹோமம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜை, மாலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:00  மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை,  நாடி சந்தானம், தீபாராதனை, 8:30 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவில் விமானங்கள் மற்றும்  கருவறையில் உள்ள தலையாரி வேலாயுத ஐயனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை கணபதி, பூரணி  பொற்கலை சமேத ஐயனார் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், துணை சபாநாயகர் சிவகொழுந்து உள்ளிட்ட திரளான பக்தர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !