வடுக்குப்பம் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED :3323 days ago
புதுச்சேரி: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று (17ம் தேதி), புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. நெட்டப்பாக்கம் அடுத்துள்ள வடுக்குப்பம் கிராமத்தில், பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, இன்று (17ம் தேதி) காலை 6:௦௦ மணிக்கு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருப்பாவை சேவை நடக்கிறது. தொடர்ந்து, 8:௦௦ மணிக்கு, திருவேங்கடமுடையான் அலங்கார சேவையும், மாலை 6:௦௦ மணிக்கு, பெருமாள் சன்னிதி புறப்பாடும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத வினியோகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினரும், கிராம மக்களும் செய்துள்ளனர்.