விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3500 days ago
கீழக்கரை, :கீழக்கரை அருகே வைகை கிராமத்தில் பழமை வாய்ந்த வன்னி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. அனுக்ஞை, புண்ணியவஜனம் நடந்தது. காலை நேற்று காலை கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். தொடர்ந்து மூலவர் வன்னி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வைகை கிராம திருப்பணிக்குழு, விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.