விஸ்வகர்மா சுவாமி இன்று திருவீதியுலா
ADDED :3350 days ago
ஈரோடு: ஈரோடு, காரைவாய்க்கால், சுயம்புநாகர் கோவிலில் தொழில் கடவுளான விஸ்வகர்மா - காயத்ரிதேவி ஆராதனை விழா இன்று (17 ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை, 5:35 மணிக்கு விஸ்வகர்மா சுப்ரபாதம், 7:35 மணிக்கு கொடியேற்றுதல், விஸ்வகர்மா வேதபாராயணம், 10:00 மணிக்கு கடம் தீர்த்தம், அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மாலை, 4:00 மணிக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, 4:30 மணிக்கு விஸ்வகர்மா - காயத்ரிதேவி வீதியுலா நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.