எண்ணாயிரம் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3325 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த எண்ணாயிரம், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. எண்ணாயிரம் கிராமத்தில் உள்ள வரசித்தி செல்வ வினாயகர், பாலமுருகன், ரதி மன்மதன், நவகிரக கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9:38 மணிக்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தார். யாகசாலை பூஜை மற்றும் வேள்விகளை பெரியதச்சூர் நடராஜ அய்யர் தலைமையிலான குழுவினர் செய்தனர்.