உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பழைய பஜார் பகுதியில் உள்ள புராதன ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணர் கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு கலசஸ்தாபனமும், இரவு, 7 மணிக்கு மங்கள இசையோடு, விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, சங்கல்பம், யாகசாலை பூஜை நடந்தது. 9:15 மணிக்கு மேல் யாகசாலையில் வைக்கப்பட்ட, கலச நீரை கொண்டு மூல கருவறையின் மேல் அமைக்கப்பட்டிருந்த கலசத்தின் மீது ஊற்றி கும்பாபி ?ஷகம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !